0
பொழுது விடிவது யாரலே? | |
பொழுது விடிந்தது. ஆனால் சேவலின் "கொக்கரக்கோ" ஒலி கேட்கவில்லை. காகமும் கரையவில்லை. மழைக் காலமானதால் சூரியன் உதித்ததும் தெரியவில்லை. நகரத்திற்குச் சென்றிருந்த ரெகு ஊருக்குள் வந்து கொண்டிருந்தார். எதிரே வந்த சந்திரனைப் பார்த்தார், "என்ன சந்திரன், மணி ஒன்பது ஆகப் போகிற்தே! வயலுக்குச் செல்லும் நேரமா இது?." என்றன் ரெகு. "இன்று பொழுது விடிந்ததே தெரியவில்லை. வீட்டில் கடிகாரமும் இல்லை. நான் மட்டுமா! ஊருக்குள் சென்று பார்! ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது!" என்றார் சந்திரன். இவர்களின் பேச்சை ஆலமருக் கிளையில் அமர்ந்திருந்த காகம் கேட்டது. அதற்கு ஒரே மகிழ்ச்சி! அங்கு வந்த கிளி, "காக்கா அண்ணே! காக்கா அண்ணே! நீங்கள் போட்ட திட்டம் நன்றாகவே நிறைவேறி விட்டது" என்று கூறியது. அப்போது நாய் ஒன்று வாயில் எலும்புத் துண்டைக் கவ்விக்கொண்டு அங்கே வந்தது. காகதைப் பார்த்து 'லொள்! லொள்!' எனக் குரைத்தது. அந்த வேளையில் அதன் வாயில் இருந்த எலும்புத் துண்டு கீழே விழுந்தது. காகம் அதை எடுக்க நினைத்துக் 'கா! கா!' என்று கரைந்தது. அப்போது, சூரியனை மறைந்திருந்த மேகம் விலகியது. காகத்தின் குரல் கேட்டுத்தான் சூரியன் உதித்தது என்று எண்ணி அங்கிருந்த சேவல் கோபம் கொண்டது. காகத்துடன் சண்டை போடத் தொட்ங்கியது. இதை ஆலமரம் பார்த்தது, "ஏன் இவ்வாறு சண்டை போடுகிறீர்கள்?" என்று கேட்டது. அதற்குச் சேவல், "நான் ஒரு நாள் காகத்தைச் சந்தித்தேன். மனிதர்கள் நம்மைக் கொன்று வருகிறார்கள். இதைத் தடுக்க ஒரு வழி சொல் என்று கேட்டேன், உடனே காகம், 'சேவலே! நாம் ஓர் ஓப்பந்தம் செய்து கொள்வோம். நீ காலையில் கூவாதே! நானும் கரையமாட்டேன். அதனால் பொழுது விடியாது, மனிதர்கள் நன்றாகத் திண்டாடட்டும்' என்று கூறியது. ஆனால் இப்போது, காகமே ஒப்பந்தத்தை மீறிக் கரைந்துவிட்டது" என்று ஆலமரத்திடம் முறையிட்டது. இதைக் கேட்ட ஆலமரம் சத்தம் போட்டுச் சிரித்தது ஒரு நல்ல தீர்ப்பு வழங்கி சண்டையை தீர்த்து வைத்தது. ஆலமரம் என்ன தீர்ப்பு வழங்கியிருக்கும்? -------------------------------------------------------------------------------- |
0Awesome Comments!