தெனாலிராமன் வரலாறு

0
தெனாலிராமன் வரலாறு
 
   சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

   சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.

    சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

   காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.

   அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

அரண்மனை விகடகவியானது எவ்வாறு என்பதும் அவனது நகைச்சுவையையும் இவ்வலை தளத்தில் உள்ள கதைகளால் அறியலாம்.

முனிவர் காட்டிய வழி

0
முனிவர் காட்டிய வழி 
 
முன்னொரு காலத்தில் நந்திபுரத்தை ஆண்டு வந்த விக்கிரம சேனனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிம்மசேனன் எனப் பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தான்.

ஆனால் சிம்மசேனனோ சிறு வயது முதலே பெரியவர்களையும், தாய், தந்தையரையும் மதிக்காமல் தன் கருத்துப்படி ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது நிரம்பியதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்கும் பொருட்டு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர்.

அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்பதில்லை. குருவையே மதிப்பதில்லை. அவனுக்கு எப்படி புத்தி புகட்டுவது என்ற யோசனையில் இருந்தார் குரு. அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனைத் திருத்தவும் ஒரு வழி கண்டுபிடித்தார்.

ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி பணித்தார் குரு. சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், `அய்யோ!' என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடத் தொடங்கினான், இளவரசன்.

அடர்ந்த காட்டினுள் ஓடிய இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறி அதன் உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி அவனைக் காணாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. பசி வயிற்றைக் கிள்ள, பயமும், அசதியும் சேர்ந்து கொள்ள அப்படியே தூங்கி போனான். திடீரென விழித்துப் பார்த்தபொழுது சிறுத்தையை காணவில்லை. சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் இளவல்.

சிறு வயது முதலே தன்னை நன் றாக வளர்த்த தாய், தந்தை மற்றும் உறவினர் அனைவரையும் உதாசீனப் படுத்தியதை நினைத்து மிகவும் வருந் தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். மற்ற மாண வர்கள் குருவுக்கு செய்யும்பணிவிடை களையும் நினைத்துக் கொண்டான். அதில் ஒன்றைக்கூட தான் செய்தது இல்லை. அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந் தினான்.

உடன் அங்கேயே குருவை மனதில் நினைத்து வணங்கினான். குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக் கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. கீழே உற்று நோக்கிய இளவரசன் யானை ஒன்று தனியே நடந்து செல்வதை கவனித்தான். யானையின் பின்னே சீரான இடைவெளி விட்டு நரி ஒன்று செல்வதையும் பார்த்தான். யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப் பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் நரியும் தொடர்ந்திருக்கக்கூடும் என்று ïகித்த இளவரசன் அவைகளுக்கு பின்னால் அவனும் நடக்க ஆரம்பித்தான்.

வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்து நீர் அருந்த தொடங்கியது. ஆற்றைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த இளவரசன் ஆற்றின் கரையோரமாக நடந்து குருவின் குடிலை அடைந்தான். குருவின் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான்.

நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இச்சிறு நாடகம் நடத்த வேண்டி வந்ததை எண்ணிய குரு, அதன் பிறகு அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்.

-------------------------------------------------------------------------------- 

சொர்க்கத்தில் நரி

0
சொர்க்கத்தில் நரி
 
நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது...?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி 'விரி'ரெனக் கிண்ற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது.

'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?'

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

"அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது.

"நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

"நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்................!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் .......................

-------------------------------------------------------------------------------- 

வாழ்வில் ஒரு நாள்

0
வாழ்வில் ஒரு நாள்
 
அன்று காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் சிறுவர்கள் சிலர், "டேய்! அதோ பார்! அடி! அடி!" என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஏன் கூச்சல் போடுகிறார்கள் என்று அறிவதற்காக நான் விரைந்தேன்.

அங்கே, ஓணான் ஒன்று வேலியின் மீது இருந்தது. அது தன் தலையைத் தூக்கி, 'ஒரு தீங்கும் செய்யாத என்னை ஏன் துரத்துறீங்க? ஏன் அடிக்கிறீங்க? என்று கேட்பது போல் பார்த்தது.

"டேய்! ஓணான் நம்மை முறைக்குடா!" என்றான் ஒரு சிறுவன்.

"இந்த முறைப்பெல்லாம் எங்ககிட்டக் காட்டாதே! காட்டினால் என்ன ஆகும் தெரியுமா?" என்றன் மற்றொரு சிறுவன்.

"ஐயோ! பாவம்!" என்றேன் நான். அருகில் நின்ற சிறுவர்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். நான் அஞ்சாது, "ஏன் அதை அடிக்கிறீங்க? அது உங்களுக்கு என்ன தீங்கு செய்தது?" என்று அவர்களைக் கேட்டேன்.

என் கேள்விக்கு பதில் ஏதுவும் கிடைக்கவில்லை.

அவர்கள் சிறு சிறு கற்களால் ஓணானைக் குறிபார்த்து அடித்தனர்.

ஒரு சிறுவன் எறிந்த கல் அதன் தலையில் பட்டு கீழே விழுந்தது.

'என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு இதுதான் கதியா?' என்பதுப் போலத் தலையை மேலும் கீழும் ஆட்டியது, துடிதுடித்து மடிந்தது.

-------------------------------------------------------------------------------- 

குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும்...

0
குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும்...
 
அந்த ஊரில் குமரேசன் என்ற குல்லா வியாபாரி ஒருவர் இருந்தார்.டவுனுக்கு சென்று வித,விதமான தலைக்குல்லாய்களை வாங்கி அவற்றை எல்லாம் ஒரு பெரிய மூட்டையாக கட்டி தலை சுமையாக நடந்து சென்றுபக்கத்து ஊர்களிலும், சந்தைகூடும் இடங்களிலும் விற்பனை செய்துவந்தார்.

அவரும் தனது தலையில் எப்போதும் குல்லா அணிந்து இருப்பார்.

வெயில் காலம் தொடங்கியது.மக்கள் வெயிலுக்கு பயந்து குல்லா வாங்கி அணிய ஆரம்பித்தனர்.வாங்கி வந்த குல்லாக்கள் அனைத்தும் உடனே விற்று தீர்ந்துவிட்டதால், குமரேசன் டவுனுக்கு சென்று விதவிதமான குல்லாக்களை வாங்கி பெரிய மூட்டையாக கட்டி பஸ்சில் ஏற்றி தன் ஊருக்கு கொண்டு வந்தார்.

அடுத்தநாள் காலை அந்த மூட்டையைதன் தலைமீது வைத்து சுமந்து கொண்டு பக்கத்து ஊருக்கு சென்றார்.

முதலில் போன ஊரில் சில குல்லாக்கள் மட்டுமே விற்பனையானது. குல்லாவியா பாரி வெயிலையும் பொருட்படுத்தாமல் பக் கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஊர் எல்லையில் இருந்த ஆலமரத்தின் கீழேசற்று நேரம் ஓய்வு எடுக்கநினைத்து குல்லா மூட்டையை இறக்கி வைத்துவிட்டு சற்று நேரம் தூங்கிவிட்டார்.

குல்லாவியாபாரி குல்லாமூட்டையுடன் தூங்குவதை அந்தமரத்தில் தங்கி இருந்த குரங்குகள் கண்டன. அவர் அணிந்து இருந்த குல்லாவை ரசித்தன.பின்னர் மரத்தில் இருந்து இறங்கிவந்து, குல்லா மூட்டையை பிரித்தன.

இதைக்கண்ட வயதான குரங்கு ஒன்று``குரங்கு நண்பர்களே...மூட்டையை அவிழ்க்காதீர்கள். அந்தமனிதர் மிகவும் ஏழ்மையானவர்.

இந்தக் குல்லாக்களை விற்று தான் அவர் பிழைத்து வருகிறார்.தயவு செய்து மூட்டையை பிரிக்காதீர்கள்''என்றது.

மற்ற குரங்குகளோ ``போ... போ...கிழட்டுக்குரங்கே உனக்கு ஒன்றும் தெரியாது, அவர் தலையை பார்...அந்தகுல்லா எப்படி கச்சிதமாக இருக்கிறது பார்...நாங்களும் அவரை போல குல்லா அணியப்போகிறோம்நீ பேசாமல் வேடிக்கை பார்'' என்றுகூறிவிட்டு குல்லாக்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்து குரங்குகள் தலையில் அணிந்து கொண்டன.

தூக்கம் கலைந்து எழுந்த குல்லா வியாபாரி குல்லா மூட்டை அவிழ்ந்து கிடப்பதைக்கண்டு திடுக்கிட்டார்.அப்போது கிழட்டுக்குரங்கு,``குல்லா வியாபாரியே, உம்முடைய குல்லாக்களை குரங்குகள் எடுத்து தலையில் அணிந்து கொண்டன.நான் எவ்வளவோகூறியும் அவை எனது பேச்சை கேட்கவில்லை'' என்று கூறியது.

குல்லாவியாபாரி ஆலமரத்தை ஏறிட்டார்.மரத்தில் இருந்த குரங்குகள் ஒவ் வொன்றும் குல்லாக்களை அணிந்து இருந்தன.

உடனே குல்லாவியாபாரி, ``குரங்குகளே எனதுகுல்லாக்களை கொடுத்துவிடுங்கள்,நான் அவற்றை விற்பனைக்காக வைத்து இருக்கிறேன்''என்றார்.

குரங்குகள் அவரின் பேச்சை காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை. உடனே குல்லா வியாபாரி கோபத்துடன் தான் அணிந்து இருந்த குல்லாவை தூக்கி வீசினார்.

உடனே குரங்குகளும் குல்லாவை கழற்றி வீச முயன்றன.ஆனால் அவைகளால் குல்லாவை கழற்றமுடியவில்லை.

குல்லாதலையில் இருந்து கீழே இறங்கி அவற்றின் கண்களை மறைத்தன. இதனால் குரங்குகள் பயந்து நடுங்கின.

உடனே குமரேசன்,``குரங்குகளே அந்தக் குல்லாக்கள் மனிதர்களுக்காக தயாரிக்கப்பட் டவை. உங்கள் தலைக்கு ஒத்து வராது. இந்தபுதுக்குல்லாவை தலையில் மாட்டுவது சுலபம், ஆனால் கழட்டுவது மிகவும் கடினம். எனவே அதைகழற்றும் விதமாகத்தான் கழட்ட வேண்டும். ஒவ்வொருவராக வாருங்கள், நான் கழற்றிக் கொள்கிறேன், இல்லைஎன்றால் அந் தக் குல்லாக்கள் உங்கள் கண்களை மறைத்து... நீங்கள் கிளைகளை விட்டு கிளைக்கு தாவ முடியாமலும், உணவை அடை யாளம் காண முடியாமலும் தவியாய் தவிக்க நேரிடும்'' என்று கூறினார்.

உடனே குரங்குகள் குல்லா வேண்டாம், தலை தப்பினால் போதும் என்று குல்லாவியாபாரி முன்பு வரிசையில் வந்து நின்றன. வியாபாரியும் குல்லாக்களை குரங்கின் தலையில் இருந்து கழட்டி எடுத்துக் கொண்டார்.

``பிறர் பொருட்களைஅவரின் அனுமதி இன்றி அபகரிப்பது அடி முட்டாள் தனமான காரியம்,அது அநாகரீகமும் கூட. அந்த செயலைத்தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.உங்கள் செயலுக்கு துணை போகாத வயதான குரங்கு மட்டும் தான் நாகரீகம் பேணிய நல்ல குரங்கு. அந்த வயதான குரங்குக்கு நான் ஒரு பரிசு கொடுக்க போகிறேன்''என்று கூறிய குல்லா வியாபாரி தான் தலையில் அணிந்து இருந்தவிலை உயர்ந்த ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய குல்லாவை எடுத்து அந்த வயதான குரங்கின் தலையில் அணிவித்தார்.

வயதான குரங்கும் அந்தகுல்லாவை மகிழ்ச்சியுடன் தலையில் அணிந்து கொண்டது. மற்ற குரங்குகள் அந்த வயதான குரங்கை ஏக்கத்துடன் பார்த்தன. இனிமேல் பிறர் பொருட்கள் மீது ஆசை வைக்கக்கூடாது என்று முடிவெடுத்தன.

குல்லாவியாபாரி குல்லாக்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டார். 

-------------------------------------------------------------------------------- 
 

Total Pageviews

Pageviews